
வேட்டையன் 2 உருவாகிறதா? - ஞானவேல் சொன்ன பதில்
இந்த நிலையில் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று இயக்குனர் ஞானவேல் இடத்தில் கேட்டபோது, வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் இருப்பதாக கூறுகிறார் . இப்படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் பேக் ஸ்டோரியை வைத்து ஒரு கதையை உருவாக்கும் எண்ணம் உள்ளது. இதற்கு ரஜினி ஓகே சொன்னால் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்கிறார் ஞானவேல்.
தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, இதையடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருப்பவர் , அதன் பிறகு வேட்டையன் 2வில் நடிப்பாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!