
வெப் தொடராகிறது ஆதி சங்கரரின் இளமை பருவ வாழ்க்கை
தொடர் குறித்து இயக்குனர் ஓங்கார் நாத் மிஸ்ரா கூறும்போது “இந்தத் தொடர் ஆதி சங்கராச்சாரியாரின் ஆரம்பகால வாழ்க்கை, அவரது ஆன்மிகப் பயணம் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் 72 மதக் குழுக்களாகப் பிரிந்திருந்த இந்தியாவை ஒருங்கிணைக்க அவர் எவ்வாறு உதவினார் என்பதை மையமாகக் கொண்டுள்ளது.
ஒருமைப்பாடு பற்றிய அவரது போதனைகள் நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதிலும் இந்தியாவின் ஆன்மிக மற்றும் அரசியல் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதிலும் அவருடைய பங்கு எத்தகையது என்பதை சொல்லும் விதமாக தயாராகி வருகிறது. 10 எபிசோட்களாக தயாராகி வரும் இந்த தொடர் அடுத்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பல ஓடிடி தளத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!