
சூர்யா 44வது படம் கேங்க்ஸ்டர் படம் இல்லை - கார்த்திக் சுப்புராஜ்
இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பை அந்தமான், கேரளா, மூணார்,சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தி வந்தனர். சமீபத்தில் இதன் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.
கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டி ஒன்றில், " சூர்யா 44வது படமாக கேங்க்ஸ்டர் படம் என கூறப்படுகிறது. ஆனால், சூர்யா 44 படம் ஒரு அழகான காதல் கதை. அதில் ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. சூர்யா, பூஜா ஹெக்டே சம்மந்தப்பட்ட காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உருவாக்கியுள்ளது. இப்படம் 2025ம் ஆண்டு கோடையில் திரைக்கு வருவதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!