
கர்ப்பமாக இருக்கும் கபாலி கதாநாயகி ராதிகா ஆப்தே
தற்போது "சிஸ்டர் மிட்நைட்" என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அப்படம் பிஎப்ஐ லண்டன் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்டார் ராதிகா. அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதற்கு முன்பாக அவருடைய தாய்மை பற்றி அவர் எதுவும் சொல்லாமல் இருந்தது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
லண்டனில் படித்த போது ஆங்கிலேயே இசையமைப்பாளர், வயலின் கலைஞர் பெனடிக்ட் டெய்லர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ராதிகா. திருமணமான 12 வருடங்களுக்குப் பிறகு ராதிகா தாய்மை அடைந்துள்ளார். பாலிவுட் கதாநாயகிகள் அடுத்தடுத்து தாய்மை அடைந்து குழந்தை பெற்று வருகிறார்கள். ஆலியா பட், தீபிகா படுகோனே வரிசையில் தற்போது ராதிகாவும் சேர்ந்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!