
அஜித்திற்கு போட்டியாக களம் இறங்கிய கீர்த்தி சுரேஷ்
அபுதாபியில் கார் ரேஸ் பயிற்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு “அதிசய அனுபவங்களுடன் நினைவுகளை உருவாக்குகிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஓராண்டாக அவர் கார் பந்தயத்துக்கான பயிற்சிகள் எடுத்து, சில மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இதையடுத்து இந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் பெற்றிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் நடித்த "ரகு தாத்தா" படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி, பேபி ஜான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!