
சிங்கப்பூர் சிவாஜி மாரடைப்பால் மரணம் : சிவாஜி போன்று நடனமாடியபடியே உயிர் துறந்தார்
சிங்கப்பூர் சிவாஜி என்ற அழைக்கப்ட்ட இவர் அங்கு திருமண விழாக்கள், பிறந்தநாள் விழாக்களில் சிவாஜி போன்று நடனமாடி மக்களை மகிழ்விப்பார். சில மலேசிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆடியுள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார்.
இந்த நிலையில் வழக்கம்போல் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிவாஜி வேடமிட்டு ஆடிக் கொண்டிருந்தவர் ஆடிய நிலையிலேயே மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மரணத்துக்கு சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு இரங்கல் தெரிவித்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!