
அன்று அஞ்சான் படத்தை கிண்டலடித்தவர் : இன்று சூர்யாவின் இயக்குனர்
இப்போது இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் ஆர்ஜே பாலாஜி, அப்போது எப்எம் ரேடியோ ஒன்றில் ஆர்ஜே-வாக வேலை செய்து வந்தார். அந்தப் படத்தைப் பற்றி அதிகமாகக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களிலும் விமர்சித்தார். அது மட்டுமல்ல அவர் காமெடி நடிகராக நடித்த "நானும் ரவுடிதான்" படத்தில் ஒரு காட்சியில் ""அஞ்சான்" படத்துக்கு அஞ்சி டிக்கெட் இருக்கு வரியா, "முகமூடி" படத்துக்கு மூணு டிக்கெட் இருக்கு வரியா”, எனவும் வசனம் பேசி நடித்தார்.
அன்று சூர்யா படத்தைக் கிண்டலடித்தவர், இன்று சூர்யாவின் 45வது படத்தை இயக்க உள்ளார். பாலாஜி தன்னைப் பற்றி கிண்டலடித்ததை பொருட்படுத்தாமல் அவருக்கு தன் படத்தை இயக்கவும் வாய்ப்பு கொடுத்த சூர்யாவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
"அஞ்சான்" போல ரசிகர்கள் அஞ்சி ஓடாத ஒரு அருமையான படத்தைக் கொடுப்பாரா ஆர்ஜே பாலாஜி ?.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!