
சிரஞ்சீவி பட டீசர்களில் விஷ்வம்பரா டீசர் சாதனை
அந்தப் படங்களின் டீசர்களுக்குக் கிடைக்காத வரவேற்பு நேற்று காலை வெளியான "விஷ்வம்பரா" படத்தின் டீசருக்குக் கிடைத்துள்ளது. 24 மணி நேரத்தில் அந்த டீசர் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
சிரஞ்சீவி நடித்து இதற்கு முன்பு வெளியான "போலா சங்கர்" படத்தின் டீசருக்கு 24 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகள் மட்டுமே கிடைத்தது. அந்த சாதனையை தற்போது "விஷ்வம்பரா" டீசர் முறியடித்துள்ளது.
மேலும், தெலுங்குத் திரையுலகத்தில் வெளியான 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டீசராக 4வது இடத்தைப் பிடித்துள்ளது. "ராதேஷ்யாம், சர்காருவாரி பாட்டா, புஷ்பா" ஆகிய படங்களின் டீசர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!