
2025 பொங்கல் போட்டியில் என்னென்ன படங்கள் ?
இந்நிலையில் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு என்னென்ன படங்கள் வரப் போகிறது என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் தற்போது நடித்து வரும் "குட் பேட் அக்லி" படம் பொங்கல் வெளியீடு என்று அறிவித்தார்கள். ஆனால், அதற்கு முன்னதாகவே ஆரம்பமான அஜித்தின் "விடாமுயற்சி" படம் பொங்கலுக்கு வரலாம் எனத் தெரிகிறது. அப்படி வந்தால், "குட் பேட் அக்லி" தள்ளிப் போகலாம்.
கார்த்தி நடித்துள்ள "வா வாத்தியார்" படம், விக்ரம் நடித்து வரும் "வீர தீர சூரன்" ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள தெலுங்குப் படமான "கேம் சேஞ்சர்" படம் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். இப்படத்தைத் தமிழிலும் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டிருப்பார்கள். இப்படம் மூலம் "இந்தியன் 2" மூலம் இழந்த பெருமையை இங்கு பெற முயற்சிப்பார் ஷங்கர்.
அஜித்தின் "விடாமுயற்சி" அல்லது ‛குட் பேட் அக்லி" படம் பொங்கலுக்கு வெளிவந்தால் அதற்குத்தான் அதிகத் தியேட்டர்கள் கிடைக்கும். அப்படியிருக்க மற்ற நேரடி தமிழ்ப் படங்களுக்கும் ஓரளவுக்காவது தியேட்டர்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இப்போதைய நிலவரப்படி இந்தப் படங்களில் எந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பது அடுத்த மாதத்திற்குள் தெரிந்துவிடும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!