எனக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Advertisement
Advertisement
எனக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அக் 12, 2024
அ நிறம் | அளவு
Advertisement
பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் "எனக்கு தொழில் ரொமான்ஸ்". இந்த படத்தின் பணிகள் நிறைவு பெற்றும் கடந்த பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடந்தது. இதில் அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம்பெருமாள், எம்.எஸ். பாஸ்கர், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த ரொமான்ஸ் படமாக உருவாகி உள்ளது. தற்போது இப்படம் வருகின்ற நவம்பர் 15ந் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர். மேலும், இதற்கு முந்தய நாள் நவம்பர் 14ம் தேதி சூர்யாவின் கங்குவா படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!