
வேட்டையன் படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர்
உதயம், சூரியன், சந்திரன் பின்னர் மினி உதயம் என நான்கு தியேட்டர்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன. நாளை வெளியாக உள்ள ரஜினிகாந்தின் "வேட்டையன்" படம்தான் அத்தியேட்டர் வளாகத்தில் வெளியாக உள்ள கடைசி படம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு தியேட்டரை மூட உள்ளார்களாம்.
இத்தியேட்டர் மூடப்படுவதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. சில டாகுமென்ட் வேலைகள் தாமதமானதல் அதுவரையில் தியேட்டரை நடத்த முடிவு செய்து தற்போது வரை நடத்தி வருகிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த "சிவப்பு சூரியன்" தான் அங்கு திரையிடப்பட்ட முதல் படம். நாளை வெளியாக உள்ள ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" படத்துடன் தியேட்டர் மூடப்படுவது ஒரு அதிசய ஒற்றுமை.
அடுக்குமாடி குயிருப்பு நிறுவனம் ஒன்று வீடுகளைக் கட்ட இத்தியேட்டர் வளாகத்தை வாங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் கட்டுமானப்பணி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!