
விவாரியம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் பிளாக் ?
"கோஹெரன்ட்" படத்தின் காப்பி என்று சிலரும், "விவாரியம்" படத்தின் காப்பி என்று சிலரும் கூறினர். ஆனால், "விவாரியம்" படத்தின் டிரைலருக்கும், "பிளாக்" படத்தின் டிரைலருக்கும் தான் பொருத்தம் அதிகமாக உள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட வில்லா குடியிருப்பு ஒன்றில் முதல் குடும்பமாக நுழையும் கணவன் - மனைவி (?) அங்கு சந்திக்கும் சில மர்மங்கள்தான் "விவாரியம்" ஹாலிவுட் டிரைலரிலும், "பிளாக்" டிரைலரிலும் இடம் பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில், “டிரைலர் வந்த உடனே நிறைய கமெண்ட்கள் வந்தது. இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்கள் எடுத்திருக்கோம். ரீமேக் படங்களை எடுத்ததில்லை. இதுதான் முதல் ரீமேக் படம். ஒரு ஆங்கிலப் படத்தின் ரீமேக்தான், முறையாக ரைட்ஸ் வாங்கி பண்ணியிருக்கோம். எந்தப் படம்கிறது ரிலீஸுக்கு அப்புறம் பேசுவோம்,” என்றார்.
படத்தின் டைட்டிலில் எப்படியும் அது பற்றிய "அறிவிப்பு கார்டு" இடம் பெறும். அப்போது ரசிகர்கள் இது எந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!