
மைசூரு தசரா விழாவில் இளையராஜா, ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி
அதில் நாளை அக்டோபர் 9ம் தேதி இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரியும், அக்டோபர் 10ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரியும் நடைபெற உள்ளது. உட்டனஹள்ளி ரிங் ரோடில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளைய இசை நிகழ்ச்சி குறித்து ஏஆர் ரஹ்மான், “அக்டோபர் 9, யுவதசரா 2024 நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் ஆர்வமாக உள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மைசூரு தசரா விழாவில் சாமுண்டீஸ்வரி அனுக்கிரகத்தில், முதல் முறையாக நவராத்திரி விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது” என இளையராஜா கன்னடத்தில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!