
‛கல்கி 2898 ஏடி - சாட்டிலைட் டிவி உரிமை விற்பனையில் தடுமாற்றம்?
இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை விற்பனை எதிர்பார்த்தபடி நடைபெறாமல் தடுமாறியது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் கடந்த சில வருடங்களில் சாட்டிலைட் டிவியில் படங்களைப் பார்ப்பது மிகவும் குறைந்துவிட்டதாம். அதனால், டிவி நிறுவனங்கள் பெரிய படங்களை அதிக விலை கொடுத்து வாங்கத் தயங்கி வருகிறார்களாம். அதன் காரணமாக "கல்கி 2898 ஏடி" படத்திற்கும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் போயுள்ளது.
முதலில் ஸ்டார் மா டிவியிலும், பின்னர் ஜீ டிவியிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள் படத்தயாரிப்பாளர்கள். அங்கு வியாபாரம் முடிவடையாத நிலையில் தற்போது ஜெமினி டிவியில் படத்தை நல்ல விலைக்கு விற்றுள்ளார்கள் என்று சொல்கிறார்கள். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.
இனி வரும் காலங்களில் பெரிய படங்களின் சாட்டிலைட் டிவி உரிமை என்பது இறங்குமுகமாகவே இருக்கும் என்பதே உண்மை. அதற்குப் பதிலாக ஓடிடி உரிமை மட்டுமே நல்ல விலைக்கு விற்கப்படலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!