
விஜய்யுடன் போட்டோ : பூஜாவை விட லைக்குகளை அள்ளிய மமிதா
நேற்று பூஜை முடிந்த சில மணி நேரங்களில் அதன் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டனர். உடனடியாக சமூக வலைத்தளங்களில் அது வைரலானது. படத்தில் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இடம் பெற்றுள்ள பூஜா ஹெக்டே, மமிதா பைஜு இருவரும் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை அவர்களது இன்ஸ்டா தளங்களில் பதிவிட்டனர்.
அதில் 27 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள பூஜாவின் பதிவுக்கு 14 லட்சம் லைக்குகளும், வெறும் 3 மில்லியன் பாலோயர்களை மட்டுமே வைத்துள்ள மமிதாவின் பதிவுக்கு 16 லட்சம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் பூஜாவை விடவும் மமிதாவுக்குத்தான் அதிக லைக்குகள், வரவேற்பு என்பதை ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.
விஜய்யுடன் "பீஸ்ட்" படத்தில் இதற்கு முன்னர் பூஜா ஜோடியாகவே நடித்திருந்தாலும், விஜய்யுடன் முதன் முதலில் நடிக்க உள்ள மமிதாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். விஜய்க்கு மலையாள ரசிகர்கள் அதிகம் என்பதால் மலையாளியான மமிதாவின் பதிவுக்கு அவர்கள் அதிக லைக்குகள் போட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!