
அதிரடி பாடலுடன் விஜய் 69வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
கமர்சியல் கதை என்றாலும் அரசியல் பின்னணி கதையில் உருவாகும் இந்த படத்தின் ஒரு பாடல் கட்சியில் தனது கட்சியின் கொடியுடன் தோன்றுகிறார் விஜய். அதோடு இந்த படத்தின் போஸ்டரிலும் ஜனநாயகத்தை காக்கும் வகையில் தீப்பந்தம் ஏந்தி போஸ் கொடுத்த விஜய், ஜனநாயக ரீதியிலான பல கருத்துக்களை முக்கிய காட்சிகளில் பேசுகிறார்.
குறிப்பாக இதுவரை ஆண்ட கட்சிகளை விமர்சிப்பதை விடுத்து, இனிவரும் காலங்களில் அரசியல் எப்படி இருக்க வேண்டும். இளைய தலைமுறை எப்படிப்பட்ட அரசியலை எதிர்பார்க்கிறார்கள் என்பது போன்ற கருத்துக்களை சொல்லும் வகையில் இந்த படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தமிழில் உருவாகும் இந்த விஜய் 69வது படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் டப் செய்து அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!