திரு இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராகும் புதிய படம்
அக் 03, 2024
Advertisement
தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர் திரு. இவர் தமிழில் கடைசியாக "சந்திர மௌலி" எனும் படத்தை இயக்கினார் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு திருவின் அடுத்த படம் குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை இந்த நிலையில் எந்தவொரு அறிவிப்பின்றி திரு ஒரு புதிய படத்தை சத்தமின்றி இயக்கி உள்ளார்.
காதல், காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெய், சாந்தனு, வானி போஜன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!