அமரன் படத்தின் முதல் பாடல் நாளை(அக்., 4) வெளியாகிறது
Advertisement
Advertisement
அமரன் படத்தின் முதல் பாடல் நாளை(அக்., 4) வெளியாகிறது
அக் 03, 2024
அ நிறம் | அளவு
Advertisement
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் "அமரன்" என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாகியுள்ளனர். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தீபாவளி வெளியீடாக அக்., 31ல் படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த படத்திலிருந்து " ஹேய் மின்னலே" எனும் முதல் பாடலை நாளை அக்டோபர் 4ம் தேதி அன்று ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இது ஜிவி பிரகாஷின் 700வது பாடல் என தெரிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!