
மீண்டும் விஜய் உடன் இணைந்த பூஜா ஹெக்டே
இந்நிலையில் இவரை தேடி மீண்டும் விஜய் பட வாய்ப்பு வந்துள்ளது. கோட் படத்திற்கு பின் வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்க போகிறார் விஜய். இந்த படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க உள்ளார் விஜய். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாளில் துவங்க உள்ளது. நேற்று முதல் படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்தவகையில் ஹிந்தி நடிகர் பாபி தியோல் இந்த படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்தது.
இன்று நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அறிவித்துள்ளனர். அவர் நாயகியாக நடிக்கிறார். அரசியல் சார்ந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் இன்னும் ஏராளமான முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளனர். ஒவ்வொன்றாக அதன் அறிவிப்பு வெளிவர உள்ளது. அனிருத் இசையமைக்கிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!