
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைகள் முடிந்த பின்னர் விரைவில் வீடு திரும்புவார் என அவரது மனைவி லதா தெரிவித்துள்ளார். இதுவரை, ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை. அதேநேரத்தில், அவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை என்றும், தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ சிகிச்சை முடிந்து 3, 4 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்கின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!