
பால சரவணனை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்சேதுபதி
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் நாயகன் ஹரீஷ் கல்யாணின் நண்பனாக படம் முழுவதும் பயணிக்கும் விதமான கதாபாத்திரத்தில் பால சரவணன் நடித்திருந்தார். படத்தில் இவர் அடிக்கும் ஒவ்வொரு கமெண்ட்டுகளும் தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்தின. இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதி பால சரவணனை நேரில் அழைத்து முத்தம் கொடுத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள பால சரவணன் கூறும்போது, “லப்பர் பந்து பார்த்துவிட்டு நேரில் அழைத்து, பாலா டேய் உன்னை படத்துல அவ்வளவு ரசிச்சேண்டா. உனக்கு தியேட்டர்ல மக்கள் கை தட்டும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சுடா தம்பின்னு கட்டி அணைத்து முத்தமிட்டு அன்பாய் பாராட்டிய அன்பு அண்ணன் விஜய்சேதுபதிக்கு மனமார்ந்த நன்றிகளும் அன்பு முத்தங்களும்” என்று கூறியுள்ளார்.
பாலசரவணன் அறிமுகமான புதிதில் விஜய்சேதுபதியுடன் இணைந்து பண்ணையாரும் பத்மினியும் படத்திலும் இன்னும் வெளிவராத இடம் பொருள் ஏவல் என்கிற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!