
சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம்
செப் 28, 2024
Advertisement
சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் நந்தன் என்ற படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்து அவரது நடிப்பில் நா நா, பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் சசிகுமார் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக சிம்ரன் நடிக்கிறார். இவர்கள் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன்பு பேட்ட படத்தில் நடித்திருந்தாலும் இவர்களுக்கு அந்த படத்தில் சேர்ந்தவாறு காட்சிகள் அமையவில்லை. பெயரிடப்படாத இந்த படத்தை குட் நைட், லவ்வர் போன்ற படங்களைக் தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். குடும்பம் சார்ந்த வித்தியாசமான கதைகளத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இன்று இந்த படத்தை பூஜை நிகழ்வுடன் அறிவித்தனர். அடுத்த மாதத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!