
ஏஐ தொழில்நுட்பத்தில் இளமையான ஜாக்கிசான் படம் : தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது
இந்த படத்தில் அனுபவம் வாய்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர் மற்றும் இளம் வீரர் என இரண்டு பேர் ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதும், அதனால் வரும் பிரச்னைகளும்தான் கதை. இதில் அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளராகவும், இளம் வீரராகவும் ஜாக்கிசான் நடித்துள்ளார். அவரது இளமை தோற்றம் "கோட்" படத்தில் விஜய்யின் தோற்றம் மாற்றப்பட்டது போன்று "ஏஐ" தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டுள்ளது.
படத்தை இயக்கி உள்ள ஸ்டான்லி டாங், ஜாக்கி சானுடன் பலமுறை இணைந்து பணியாற்றி உள்ளார். 1992ம் ஆண்டிலேயே, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வசூல் சாதனைகளை முறியடித்த அவர் இயக்கிய போலீஸ் ஸ்டோரி, மிமி : சூப்பர் காப் படம் பெரிய வெற்றி பெற்றது. "ரம்பிள் இன் தி பிராங்க்ஸ், "போலீஸ் ஸ்டோரி 4 : பர்ஸ்ட் ஸ்ட்ரைக்," "தி மித்", "குங் பூ யோகா", படங்களையும் இயக்கினார்.
"ஏ லெஜன்ட்க் ("தி மித் 2") திரைப்படத்திற்காக ஜாக்கி சானும் ஸ்டான்லி டாங்கும் மீண்டும் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் உருவாகி உள்ள இந்த படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!