
அபிநயா நாயகியாக நடிக்கும் பிள்ளையார்சுழி
தற்போது அவர் நாயகியாக நடித்துள்ள படம் "பிள்ளையார்சுழி". சிலம்பரசி என்பவர் தயாரித்துள்ள இந்த படத்தில் தீரஜ் இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ரேவதி, மைம் கோபி, சீனிவாசன், மேத்யூ வர்கீஸ் நடித்துள்ளனர். பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன், அருவி இசை அமைத்துள்ளனர்.
படம் குறித்து தீரஜ் கூறியதாவது : நியூயார்க், சிலோன் திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றுள்ள இப்படத்தில், விசேஷ குழந்தைகளுக்கு நமது சமூகம் எந்தளவு ஆதரவு தருகிறது என்று சொல்கிறோம். விசேஷ பள்ளிக்கு சென்று, அவர்களின் வாழ்க்கை குறித்து கண்டறிந்தேன். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பேசுவதோடு, அதற்கு தீர்வையும் சொல்கிறோம் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!