
தேவரா : தனித்து தாக்கு பிடிப்பாரா ஜுனியர் என்டிஆர்?
"ஆர்ஆர்ஆர்" படத்தில் ராம் சரணும் மற்றொரு கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்திற்குப் பின் அவர்கள் இருவரும் தனி கதாநாயகர்களாக நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் "கேம் சேஞ்சர்" படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜுனியர் என்டிஆர் தனி கதாநாயகனாக நடித்துள்ள "தேவரா" படத்தின் முதல் பாகம் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் அவரது தனி படங்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படமாக சாதனை புரிந்துள்ளது. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமை மட்டும் 110 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல். மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் சேர்த்து ஒட்டு மொத்தமாக 180 கோடி வரை வியபாரம் நடைபெற்றுள்ளதாம்.
இப்படம் தென் மாநிலங்களில் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தெலுங்கு நடிகரான பிரபாஸுக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக தனி அடையாளத்துடன் உயர்வார் ஜுனியர் என்டிஆர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!