
தமிழகத்தில் 100 கோடி ஷேர் தந்த தி கோட் ?
இதனிடையே, கடந்த 18 நாட்களில் இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 200 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் மூலம் கிடைத்த "ஷேர்" தொகையும் 100 கோடியைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இத்தனை ஆண்டு கால வரலாற்றில் மூன்று படங்கள் மட்டுமே 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. "லியோ, பொன்னியின் செல்வன் 1" ஆகிய படங்களை அடுத்து தற்போது "தி கோட்" படம் அந்த சாதனையைப் புரிந்துள்ளது. அந்த மூன்றில் இரண்டு படங்கள் விஜய் படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
"தி கோட்" வசூல் இந்த வாரத்தில் மொத்தமாக 450 கோடியைக் கடக்கலாம் என்பது கூடுதல் தகவல்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!