
எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா ஏஐ வீடியோ
ஏஐ.,யை பயன்படுத்தி சிலரை அசிங்கப்படுத்துகின்றனர். அதிலும் செலிபிரட்டிகளை ஏஐ மூலம் நெட்டிசன்கள் அவர்களின் இஷ்டத்திற்கு எடிட் செய்து பரப்புவது அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக "டீப் பேக்" மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து பரப்பினர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி கூட, தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள் என வலியுறுத்தினார். பின்னர் எடிட் செய்தவர்களை போலீசார் கைது செய்ததால், இந்த விவகாரம் கொஞ்சம் குறைந்தது.
திரிஷா
அந்த வகையில், தற்போது "தி கோட்" படத்தில் விஜயுடன் திரிஷா நடனமாடினார். அதே கெட்டப்பில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரிஷாவும் ஒரு இளைஞரும் கட்டிப்பிடிப்பது போலவும், லிப்லாக் முத்தம் கொடுப்பது போன்றும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். அனுமதி இல்லாமல் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி இப்படி செய்வது குற்றம் எனவும், இதுபோன்று சித்தரித்து கேவலப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இனிவரும் நாட்களில் இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!