
விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் தி கோட்
ஆனால், 600 கோடி வசூல் சாதனைதான் கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. அதுவும் ரஜினிகாந்த் நடித்த "ஜெயிலர்", விஜய் நடித்த "லியோ" ஆகியவை கடந்த வருடம் வெளியாகி அந்த சாதனையைப் படைத்தன.
இந்த வருடம் வெளியான படங்களில் முதல் முறையாக 400 கோடி வசூலைக் கடந்த படமாக விஜய் நடித்து வெளிவந்த "தி கோட்" படம் அமைந்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 413 கோடி வசூலை "தி கோட்" பெற்றுள்ளதாக அறிவித்தது.
விஜய் நடித்து வெளியான ஒரு படம் 400 கோடி வசூலைக் கடப்பது இது இரண்டாவது முறை. கடந்த வருடம் வெளியான "லியோ" படம் 7 நாட்களில் 461 கோடி வசூலித்தது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் 12 நாட்களில் 540 கோடி வசூலித்த அறிவிப்புடன் நிறுத்திவிட்டார்கள். ஆனாலும், 600 கோடியை அப்படம் கடந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
"லியோ" படத்துடன் ஒப்பிடும் போது "தி கோட்" படம் 400 கோடி வசூலைக் கடக்க கூடுதல் நாட்களை எடுத்துக் கொண்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!