
கூலி படத்தின் சண்டைக்காட்சி லீக் : லோகேஷ் கனகராஜின் வருத்தமான பதிவு
இந்த நிலையில் நேற்று திடீரென சமூக வலைதளங்களில் கூலி படத்தின் படப்பிடிப்பில் நாகார்ஜூனா சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து வருத்தத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், "இரண்டு மாதங்களாக எங்கள் படக்குழுவினர் கடுமையாக உழைத்து எடுத்த காட்சியை ஒரு வீடியோ மூலம் கசியவிட்டு வீணாக கெடுக்கிறார்கள். தயவு செய்து இதுபோன்ற விஷயங்களை பகிரவோ, ஆதரவோ தர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்"" என குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!