
நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசை : தேவரா விழாவில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி பேச்சு
இதில் ஜான்வி கபூர் பேசியதாவது : சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சென்னை என்றாலே அம்மாவுடன் (ஸ்ரீதேவி) இருந்த பல நினைவுகள் இருக்கு. அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் தருவீர்கள் என நம்புகிறேன். அந்த அளவுக்கு கடினமான உழைப்பையும் கொடுப்பேன். தேவரா எனக்கு ஸ்பெஷல் படம். உங்களுக்கும் பிடிக்கும். நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் ஆசை இருக்கிறது. அதற்கான வாய்ப்பு விரைவில் வரும் என்று நம்புகிறேன் என்றார்.
ஜூனியர் என்.டி.ஆர் பேசியதாவது : சென்னை எனக்கு பிடித்த இடம். சென்னையில்தான் நான் குச்சுப்புடி நடனம் கற்றுக் கொண்டேன் என்பது பலருக்கும் தெரியாது. தேவரா எந்தளவுக்கு எனக்கு ஸ்பெஷல் என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. படம் சிறப்பாக வர உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் ஸ்பெஷலானதாக அமையும். ஜான்வியின் சிறப்பான நடிப்பு உங்களுக்குப் பிடிக்கும்.
சினிமாவை கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல் வுட் என்று பிரித்து பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாமே சினிமாதான். எனக்கு நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் ஆசை இருக்கிறது. குறிப்பாக வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தெலுங்கில் டப் பண்ணலாம். அது நடக்கும் என்று நம்புகிறேன் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!