
செப்டம்பர் 20ல் 8 படங்கள் ரிலீஸ்…
தயாரிப்பாளர்களுக்கென நான்கு சங்கங்கள் தமிழ்த் திரையுலகத்தில் இருந்தாலும் படங்களின் வெளியீட்டுத் தேதிகளை முறைப்படுத்துவது சரியாக நடக்கவில்லை என பல தயாரிப்பாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.
இந்த வார வெள்ளிக்கிழமையான செப்டம்பர் 20ம் தேதி, “தோனிமா, கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், சட்டம் என் கையில், கோழிப்பண்ணை செல்லதுரை, தோழர் சேகுவேரா, தி கன்பெஷன்” ஆகிய 8 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்த "தி கோட்" படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியானதால் அதற்கு முன்பும், பின்புமாக ஒரு வாரம் படங்கள் சரியாக வெளியாகவில்லை. அடுத்த மாதம் அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள "வேட்டையன்" படம் வெளிவரும் போதும் அப்படியேதான் நடக்கும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!