
வெற்றி தீபம்... ஜனநாயகத்தின் ஒளி... : அரசியல் படமா... ‛விஜய் 69
நேற்று(செப்., 13) இந்த படத்தை பெங்களூருரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று(செப்., 14) விஜய் 69 படத்தை வினோத் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் வெற்றிக்கான தீபத்தை ஏந்துவது போன்று உள்ளது. மேலும் ‛ஜனநாயகத்திற்கான ஒளி விளக்கு" என குறிப்பிட்டுள்ளனர். இதனால் இது அரசியல் படமாக இருக்கலாம் என தெரிகிறது. மேலும் அனிருத் இசையமைப்பதாகவும், அடுத்தாண்டு அக்டோபரில் படம் ரிலீஸ் என தெரிவித்துள்ளனர்.
69வது படத்துடன் விஜய் அரசியலுக்கு செல்ல உள்ளதால் நிச்சயம் இந்த படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் அதிகம் இருக்கும் என சொல்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே இப்பட அறிவிப்பு போஸ்டரும் உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!