
பிரபு, வெற்றி நடிக்கும் அப்பா மகன் படம்
அறிமுக இசை அமைப்பாளர் நவ்பல் ராஜா இசை அமைக்க, ஆலிவர் டேனி ஒளிப்பதிவு செய்கிறார். வசந்த் சாய், மற்றும் நந்தா பெரியசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மகா கந்தன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது "கிராமத்து தந்தையும் மகனும் என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் அவர்களுக்கு நடுவில் ஒரு மென்மையான அன்பு இருக்கும். ஆனால் அதன் வெளிப்பாடு பெரிதாக இருக்கும். அதனைச் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!