
ஷங்கரின் கேம் சேஞ்சர் 2025க்கு தள்ளி போகிறதா?
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த "இந்தியன் 2" படம் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது. அதிலிருந்து முற்றிலும் விலகி "கேம் சேஞ்சர்" படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளை ஷங்கர் ஆரம்பித்துள்ளார் என்றும் சொல்கிறார்கள். அடுத்த இரண்டு மாதங்களில் அவை முடியுமா என்பதும் சந்தேகம் என டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. அதனால்தான் பட வெளியீடு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார்களாம். 2025ம் ஆண்டு பட வெளியீடு தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!