
மெய்யழகன் குழுவினரின் தமிழ்ப் பற்று
டீசர் என்பது ஆங்கில வார்த்தை, அதற்கு "கிளர்வோட்டம்" என்று தமிழில் பெயர் வைத்து அதைத்தான் அவர்களது போஸ்டர்களிலும் குறிப்பிட்டுள்ளனர். அது மட்டுமல்லாது படத்தின் வெளியீட்டுத் தேதியை தமிழ் மாத கணக்குப்படி "புரட்டாசி 11" வெளியீடு என்றும் டீசரின் கடைசியில் சேர்த்துள்ளனர்.
டீசர், டிரைலர், போஸ்டர், பர்ஸ்ட் லுக், வியூஸ், பர்ஸ்ட் சிங்கிள் என பல ஆங்கில வார்த்தைகள் தமிழ் சினிமா விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. "பர்ஸ்ட் லுக்" என்பதற்கு "முதல் பார்வை", வியூஸ் என்பதற்கு "பார்வை" என்ற பொருத்தமான வார்த்தைகள் மட்டும் பழக்கத்தில் உள்ளது.
டீசர், டிரைலர் ஆகியவற்றிற்கு முன்னோட்டம் என்று சிலர் குறிப்பிடுவர். ஆனால், "மெய்யழகன்" குழு டீசருக்கு "கிளர்வோட்டம்" என தமிழில் வைத்துள்ளது. அடுத்து "டிரைலர்" வெளியிடும் போது என்ன சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். மக்களின் பயன்பாட்டில் எந்த வார்த்தை வருகிறதோ அதுதான் நிலைத்து நிற்கும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!