
27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்தில் மலேசியா வாசுதேவனின் குரல்
தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "வேட்டையன்" . லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்திலிருந்து "மனசிலாயோ" எனும் முதல் பாடல் செப்டம்பர் 9ம் தேதியான இன்று மாலை வெளியிடுகின்றனர். ஏ.ஐ தொழிநுட்பத்தை பயன்படுத்தி மலேசியா வாசுதேவன் குரலில் இப்பாடலை உருவாக்கியுள்ளனர்.
சமீபகாலமாக மறைந்த பிரபல பாடகர்களின் குரல்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். பம்பா பாக்யா, சாகுல் ஹமீது, பவதாரிணி ஆகியோரை தொடர்ந்து மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!