
டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரிக்கு ‛கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது
செப் 07, 2024
Advertisement
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ஆரம்பமாகிறது. இதில் சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்து நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். அதற்கு முன்பாக காலை 8 மணி முதல் அனைவருக்கும் "இலவச மருத்துவ பரிசோதனை, இலவச கண் பரிசோதனை" நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில் நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மேலும், மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அழகு, முத்துக்காளை, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி, எம்.ஆர்.சோலைவள்ளி, எம்.காமராஜ், பிரசாத் வி.சி. ராஜேந்திரன், எம். ஏ.பிரகாஷ் ஆகிய பத்து பேருக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படுகிறது.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!