
தி கோட் - காலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதியா ?
இந்நிலையில் விஜய் நடித்து இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள "தி கோட்" படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இருந்தாலும் கோயம்பத்தூரில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டரில் காலை 7 மணிக்கும், 7.40 மணிக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11ம் தேதி வரையிலும் அந்த காட்சிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த இடத்திலும் இப்படியான முன்பதிவு நடைபெறவில்லை. அப்படியிருக்க அந்த குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் எந்தவிதமான அரசு அனுமதி பெற்று இப்படி முன்பதிவு செய்து வருகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!