
மூத்தவர் படம் வருவதே சரி : விலகிச் சென்ற சூர்யா
கோவையில் நேற்று நடைபெற்ற "மெய்யழகன்" பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சூர்யா அது பற்றி பேசினார்.
""கங்குவா" நியூஸுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கீங்க. இரண்டரை வருஷத்துக்கு மேல, ஆயிரம் பேருக்கு மேல, தமிழ் சினிமாவுல ஒரு ஸ்பெஷலான படத்தைக் கொடுத்துடணும்னு ராப்பகலா ஒரு ஆயிரம் பேர் வேலை செஞ்சிருக்காங்க. சிவால இருந்து, வெற்றி சார்ல இருந்து, அந்த டீம் எல்லாம் வெயில், மழை, குளிரு, மலை உச்சி, கடலுக்குள்ள, தண்ணிக்குள்ளன்னு வேலை செஞ்சிருக்காங்க. அந்த உழைப்பு என்னைக்கும் வீண் போகாதுன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. அதுக்கான அன்பும், மரியாதையும் நிச்சயமா கொடுப்பீங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. அது வரப்போகுது, அது வரட்டும்னுதான் நான் சொல்லுவேன்.
அக்டோபர் 10 ரஜினி சாரோட "வேட்டையன்" வருது. நம்முடைய மூத்தவர், நான் பிறக்கும் போதே நடிக்க வந்தவர். கிட்டத்தட்ட ஐம்பது வருஷமா தமிழ் சினிமாவோட அடையாளமா இருக்கறவர். அந்த மூத்தவருக்கு, சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு அவங்க படம் வரதுதான் சரியா இருக்கும்னு நான் நினைக்கிறேன். நீங்களும் என் கூட இருப்பீங்கன்னு நான் நம்பறேன். "கங்குவா" ஒரு குழந்தை, அந்த குழந்தை பிறக்கற அன்னைக்குதான் பிறந்தநாள். அந்த பிறந்தநாளைக் கொண்டாடறதுக்கு, அதை பண்டிகையாக்கறதுக்கு நீங்க என் கூட இருப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு,” என்றார்.
இதையடுத்து அக்டோபர் 10ம் தேதி "வேட்டையன்" தனியாக வருகிறார். "கங்குவா" படம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. விரைவில் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!