
தீபாவளியை டார்கெட் செய்யப் போகும் கங்குவா ?
இந்நிலையில் "கங்குவா" படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் திட்டமிட்டபடி முடியாத காரணத்தால் அக்டோபர் 10க்குப் பிறகு அக்டோபர் 31ம் தேதி தீபாவளிக்கு படத்தை வெளியிட உள்ளதாக புதிய தகவல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. பான் இந்தியா வெளியீடு என்பதால் எந்த சிக்கலும், தாமதமும் இல்லாமல் படத்தை வெளியிட "கங்குவா" குழுவினர் முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். விரைவிலேயே இதற்கான அறிவிப்பும் வர உள்ளதாம்.
இத்தகவல் தமிழ்த் திரையுலகத்தில் பரவியுள்ளதை விட தெலுங்குத் திரையுலகத்தில்தான் அதிகம் பரவியிருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!