
மலையாளத்தில் மட்டும் தான் நடக்கிறதா? - பாலியல் புகார்கள் குறித்து டொவினோ தாமஸ் கருத்து
இந்த நிலையில் நடிகர் டொவினோ தாமஸ் மலையாள திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் இப்படி தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவது குறித்து கூறும்போது, “ஏதோ மலையாள திரையுலகில் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகள் இருப்பது போல சித்தரிக்கப்படுகிறது. ஒரு ஹேமா கமிஷன் குழுவினர் இதுபோன்று ஒரு விசாரணையை மலையாள திரையுலகில் மட்டுமே முன்னெடுத்து துவக்கி உள்ளனர். இதை போன்று மற்ற திரையுலகங்களிலும் விசாரணை நடத்தினால்தான் அங்கு இருக்கும் இது போன்ற பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வரும்” என்று கூறியுள்ள அவர், இது போன்ற குற்றங்களை யார் செய்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சினிமாவில் மட்டுமல்ல பெண்கள் தாங்கள் பணியாற்றும் எந்த ஒரு இடத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!