
அம்மாவை மதிக்காமல் சென்றாரா விஜய்?
கட்சிக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு விஜய் அங்கிருந்து நகர்ந்து சென்ற போது அவருடைய அம்மா விஜய்யின் கையைப் பிடித்து ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், அதை கண்டு கொள்ளாமல், அம்மாவை திரும்பிக் கூடப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு விஜய் நகரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் உடனடியாகப் பரவியது.
தன்னுடைய அம்மாவை விஜய் மதிக்காமல் செல்வது சரியா என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேடையில் பேசும் போது மட்டும் அப்பா, அம்மாவுக்கு நன்றி சொல்லியிருந்தார் விஜய்.
விஜய் தீவிர அரசியலில் இறங்கும் போது அவரது குடும்பத்தினரைப் பற்றியப் பேச்சுக்களும் அவருக்கு எதிராகத் திரும்பும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!