
நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமண அறிவிப்பு : விரைவில்…
இந்நிலையில் நாக சைதன்யா, சோபிதா திருமணம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. திருமணத்தை நீண்ட நாட்கள் தள்ளி வைக்க இருவரது குடும்பத்தினரும் விரும்பவில்லையாம். திருமண நிச்சயத்திற்குப் பிறகு மும்பையில் சோபிதா சென்ற போது அவரைப் புகைப்படமெடுத்த கலைஞர்கள் "எப்போது பார்ட்டி" எனக் கேட்டுள்ளனர், அதற்கு விரைவில் என பதிலளித்துள்ளார் சோபிதா.
"டெஸ்டினேஷன்" திருமணமாக நடக்குமா அல்லது ஐதராபாத்தில் திருமணம் நடக்குமா என்பதும் விரைவில் தெரிந்துவிடும். நாக சைதன்யா, சமந்தாவின் திருமணம் "டெஸ்டினேஷன்" திருமணமாக கோவாவில் நடைபெற்றது. அதனால், நாக சைதன்யா, சோபிதா திருமணம் ஹைதராபாத்தில் தான் நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!