
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை
இந்நிலையில் சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய ரவுடி சாம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு போனில் மோனிஷா பேசியதாகவும், அவருக்கு அடைக்கலம் தந்ததாகவும் கூறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொட்டை கிருஷ்ணன் வக்கீல் என்பதால் தங்கள் வழக்கு தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசியதாக மோனிஷா தெரிவித்துள்ளாராம். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக இயக்குனர் நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!