
6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வருகிறார் பியா பாஜ்பாய்
பெரிய வாய்ப்புகள் இன்றி இருந்த பியா பாஜ்பாய் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு "மாயன்" படத்தின் மூலம் திரும்பி வருகிறார். இந்த படத்தில் பிந்து மாதவி, பிரியங்கா மோகன் ஆகியோருடன் 3வது நாயகியாக பியா நடிக்கிறார். ஜெ.ராஜேஷ் கண்ணா எழுதி, இயக்கி இருக்கும் இந்த படத்தை பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன், ஶ்ரீ ரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார், கே.கே. மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார். கே.அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு பாகமாக வெளிவரும் இந்த படம் பேண்டசி த்ரில்லர் படமாக உருவாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!