
டிமான்ட்டி காலனி 2 படத்திற்கு பில்டப் கொடுக்கும் வெளிநாட்டு வினியோகஸ்தர்
இப்படத்தை அமெரிக்காவில் வெளியிடும் வினியோகஸ்தர் படத்தை முன்னதாகவே பார்த்திருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டி "பில்டப்" கொடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“டிமான்ட்டி காலனி 2… வாவ் வாவ்... என்ன ஒரு திரைக்கதை அஜய் ஞானமுத்து ப்ரோ. ஆகஸ்ட் 15ம் தேதி மொத்த இந்தியத் திரையுலகமும் உங்களது திரைக்கதை பற்றிப் பேசும். "மகாராஜா" படத்திற்குப் பிறகு இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியது எங்களுக்கு அதிர்ஷ்டமே.
எனது வாழ்நாளில் இப்படி ஒரு ஹாரர் திரைப்படத்தை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்ததில்லை., மொபைல் போனை இரண்டரை மணி நேரமும் தொடவேயில்லை. பிரியா பவானி சங்கர் மீதான அனைத்து எதிர்மறையும், டிரோல்களுடன் இந்தப் படத்துடன் முடிந்துவிடும். இந்த ஸ்கிரிப்ட்டிற்குத் தேவையான ஆதரவுடன் அருள்நிதி அற்புதமாக நடித்திருக்கிறார். உங்களது தேர்வுக்கு நான் ரசிகன். விமர்சகர்களுக்கு சாரி, இந்தப் படத்தில் இருந்து எப்படி ஒரு குறையைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்,” என பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!