
பிளாஷ்பேக் : பெண் வேடத்தில் நடித்த எம்ஜிஆர்
கதைப்படி ஜெயலலிதாவை வில்லன் அசோகன் கடத்திக் கொண்டு போய் கட்டி வைத்திருப்பார். அவரை மயக்கி ஜெயலலிதாவின் மீட்பதற்காக நவநாகரீக பெண் வேடம் அணிந்து கவர்ச்சியாக நடனமாடி ஜெயலலிதாவை எம்ஜிஆர் மீட்பது தான் காட்சி. இந்த பாடலைப் பாடியவர் எல்.ஆர். ஈஸ்வரி. "என்ன மேன் பொண்ணு நான்... சும்மா சும்மா பார்க்காதே" என்று ஆரம்பமாகும். எம்ஜிஆரின் ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளரான எம்.ஏ.முத்துதான் இப்பாடல் காட்சிக்காகவும் ஆடை வடிவமைத்துக் கொடுத்தவர்.
1968ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை எம். ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். தேவர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. கேவி மகாதேவன் இசையமைத்திருந்தார். ரொமான்டிக் லவ் ஸ்டோரியாக இந்த படம் வெளிவந்தது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!