
ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் வெளியாகும் ‛கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி தயாராகி வரும் திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்". சுருக்கமாக கோட் என அழைக்கின்றனர். பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. செப்., 5ல் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாகிறது. இந்நிலையில் உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளிலும் இப்படம் வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஐமேக்ஸ் தியேட்டர்கள் இப்போது தான் அதிகமாகி வருகிறது. கோட் படம் இந்திய அளவில் சுமார் 25 ஐமேக்ஸ் தியேட்டர்களில் வெளியாகும் என தெரிகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் சென்னையில் இரண்டு ஐமேக்ஸ் திரைகள் உள்ளன. கோவையில் சமீபத்தில் ஒரு ஐமேக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டது. அப்படி பார்க்கையில் கோட் படம் தமிழகத்தில் 3 ஐமேக்ஸ் தியேட்டர்களில் வெளியாகிறது.
இதற்கு முன்னர் விஜய்யின் ‛லியோ" படமும் ஐமேக்ஸ் தியேட்டரில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!