
ஆக., 12ல் சூர்யாவின் கங்குவா டிரைலர் வெளியாகிறது
சரித்திர காலம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு விதமான காலகட்ட கதையில் உருவாகி இருக்கும் இந்த கங்குவா படத்தின் டிரைலர் வருகிற 12ம் தேதி வெளியாக இருப்பதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இப்படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபிதியோல் ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ் .ரவிக்குமார் என பலர் நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!