
பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் நடித்த இலங்கை பிரதமரின் கணவர்
அவர் நடித்த தமிழ் படம் "நங்கூரம்". 1979ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய குமாரதுங்க உடன் லட்சுமி, முத்துராமன், வி.எஸ்.ராகவன், சுருளிராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இலங்கை இயக்குனர் திமிதி வீர ரத்ன இயக்கி இருந்தார். வி.குமார் மற்றும் பிரேமசிறி கேமதாச என்ற இலங்கை இசை அமைப்பாளர் இசை அமைத்தனர்.
விஜய குமாரதுங்க இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் இளைஞனாக நடித்திருந்தார். பிற்காலத்தில் இலங்கை அரசியலில் தீவிரம் காட்டினார். அகிம்சை வழியில் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்தார். 1988ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!